Jump to content


Photo

நான் ஈ விமர்சனம் - பழிவாங்கும் ஈ


 • This topic is locked This topic is locked
6 replies to this topic

#1 Speedster

Speedster

  HaPpY

 • VIP
 • 624 posts

Posted 10 July 2012 - 08:42 PM


நான் ஈ விமர்சனம் - பழிவாங்கும் ஈ


நடிப்பு: நானி, சமந்தா, சுதீப் இயக்கம்: எஸ்.எஸ்.ராஜமவுலி தயாரிப்பு: பி.வி.பி சினிமாஸ் இசை: மரகதமணி ஒளிப்பதிவு: செந்தில்குமார்

Posted Image


தன்னை கொன்றவனை அடுத்தப்பிறவியில் ‘ஈ’ யாகி பழிவாங்கும் சிம்பிள் கதைதான். ஆனால், அதை

எந்த வித ‘ஈ’யடிச்சான் காப்பியும் இல்லாமல் சொன்ன விதத்தில் பிரமாண்டமாகி இருக்கிறது ‘நான்


ஈ’.இரண்டு வருடமாக தன் பின்னால் அலையும் நானியிடம், காதலை சொல்லாமல் கலங்கடிக்கிறார்சமந்தா. காதல்

பொங்கி அதை சொல்ல துடிக்கும்போது,
தொழிலதிபர் சுதீப்பால் கொல்லப்படுகிறார் நானி. காரணம், சமந்தாவை

பெண்பித்தர் சுதீப்புக்கு பிடித்திருக்கிறது. பிறகென்ன? சாதாரண ‘ஈ’யாக மறுபிறவி எடுக்கும் நானி, சுதீப்பை எப்படி

பழிவாங்குகிறார் என்பதுதான் படம். வலிமையான திரைக்கதை இருந்தால் எதையும் ரசனையாகச் சொல்ல முடியும்

என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் ராஜமவுலிக்கு முதலில் ரெட்கார்பெட் வரவேற்பு.நானி&சமந்தாவின் காதல் க்யூட்

கவிதை. துரத்தி துரத்தி காதலிக்கும்நானியை தூரத்திலிருந்தே ரசிப்பதும், பக்கத்தில் பந்தா காட்டுவதுமாக மெல்லிய

உணர்வுகளை கூட அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் சமந்தா. காதலி வீட்டில் பவர் கட்டாக, தன் வீட்டு டிஷ்

ஆண்டனா மூலம் அவர் வீட்டுக்கு வெளிச்சம் தருவதும் 15 ரூபாய் டொனேஷன் கொடுத்துவிட்டு செலவு கணக்கு

கேட்பதும் கோவிலில் தனக்கு பிரசாதம் கொடுக்காமல் போகும் சமந்தா, தனக்கு ஸ்பெஷல் என்று நண்பனிடம்

விளக்கம் கொடுப்பதுமாக சில காட்சிகளேவந்தாலும் நெஞ்சில் நிற்கிறார் நானி.
படத்தின் நிஜ ஹீரோ சுதீப்தான்.

சமந்தாவை காதலிக்கும் நானி மீது வரும் வெறுப்பு, ‘உன் உயிர்
போறதை என் கண்ணால பாக்கணுன்டா’ என்று

நானியை அவர் கொல்லும்போது கண்களில் தெரியும்
வெறி இவற்றால் அக்மார்க் வில்லனாக

மிரட்டுகிறார். பிற்பகுதியில் ஈயால் துரத்தப்பட்டு, அதை
மற்றவர்களிடம்சொல்ல முடியாமல் தனது அவஸ்தையை

ரகசியமாக அனுபவிக்கும் காட்சிகளில்
சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ‘ஈ’ அட்டாக்கில் அவர் படும்

அவஸ்தைகள்
சூப்பர் காமெடி.அடுத்த ஹீரோ கிராபிக்ஸ் ‘ஈ’. காதலிக்கு சிக்னல் கொடு ப்பது, வில்லனை தன்

பலத்துக்குள் இருந்தே பழிவாங்குவது என மிரட்டுகிறது. ரஜினி ஸ்டைல், சந்தோஷம், கவலை,
ஏமாற்றத்தைக் கூட

துல்லியமாக வெளிப்படுத்த வைத்திருக்கிறார்கள். ஈக்கு அதீத சக்தி இருப்பதாக
காட்டாமல் அதனால் என்ன செய்ய

முடியுமோ, அதைக் கொண்டே வில்லனை பழிவாங்க
வைத்திருப்பது அற்புதம். வில்லனை விபத்துக்குள்ளாக்குவது,

பணத்தை எரிப்பது, கடைசியில் அவனை
அழிப்பது என்று எல்லாவற்றிலும் கவனமான திரைக்கதை. மிகச்சிறிய

உருவம் கொண்ட ஈ பெரிய உருவம் கொண்ட மனிதர்கள்இருவரையும் ஒரே காட்சிக்குள
அற்புதமாக பொருத்தியிருக்கும்

கோணங்கள் மிரள வைக்கிறது. மரகதமணியின் பின்னணி இசை
படத்தின் விறுவிறுப்புக்கு பலம் கூட்டியிருக்கிறது.

எது கிராபிக்ஸ், எது நிஜம் என்று தெரியாத அளவுக்கு
கடுமையாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார்.

கிராபிக்ஸ், ஸ்பெஷல் எபெக்ட்ஸ்
டீமின் உழைப்பும் அபாரம்.சந்தானம் ஒரே ஒரு காட்சியில் வந்து சிரிக்க வைத்து

போகிறார். நானி
கொலையை போலீஸ் விசாரிக்காதது, சுதீப் தன் பார்ட்னர், மந்திரவாதி என்று எல்லோரையும்

ஈசியாக
கொல்வது, நானியின் இறந்த உடலை பார்க்கும் சமந்தா, பெரிய அதிர்ச்சி காட்டாமல்

இருப்பது,
எதிலும் ஜாக்கிரதையான சமந்தா வில்லனின் தவறான தொடுதல்களை புரிந்து கொள்ளாதது

என ஏகப்பட்டகேள்விகள் வந்துபோனாலும் அதுக்கு

அப்பாற்பட்டு ‘ஈ’யின் ஆக்ஷன் அவதாரத்தை
குழந்தைகளுடன் ரசிக்கலாம்.


:)NAN E OVERALL SUPERB MOVIE DONT MISS IT:Thanks:


Edited by Speedster, 10 July 2012 - 09:09 PM.

 • 0

#2 -={ Super Star }=

-={ Super Star }=
 • VIP
 • 6,026 posts

Posted 10 July 2012 - 08:46 PM

very different script..nice movie.. :Thanks:
 • 0

#3 Guest_TR Google_*

Guest_TR Google_*
 • Guests

Posted 10 July 2012 - 09:22 PM

Great Movie...... :sign0008:

#4 Demonoid

Demonoid

  TR - Thala Rasigan

 • VIP
 • 347 posts

Posted 10 July 2012 - 10:50 PM

I too agree with your review.
 • 0