Jump to content


Photo

Today Extra

Today Extra

  • This topic is locked This topic is locked
3 replies to this topic

#1 🅣.🄼.🄸.🄽.🄴.🅡

🅣.🄼.🄸.🄽.🄴.🅡

    tђคlค 🅐🅙🅘🅣🅗 รเг

  • Team Rockers
  • 2,179 posts

Posted 13 June 2018 - 06:16 PM

Today Extra

 

இன்றைய கடி !!
 
ஆசிரியர் : உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்.... 
 
மாணவன் : சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்...
 
ஒருவர் : பொய் சொன்னா கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே...? உங்களுக்குத் தெரியுமா.....😇😇
 
நண்பர் : ம் தெரியுமே....😌 நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்.
 
 
அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
 
ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
 
பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
 
என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை.
என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?....😆😆
 
 
பூமியை போலவே ஒரு புதிய கிரகம் - இந்திய விஞ்ஞானிகள் சாதனை!
 
இந்திய விஞ்ஞானிகள் முதல்முறையாக புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அகமதாபாத்தை சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் குழு, பூமியை போலவே இருக்கும் கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அபிஜித் சக்ரபோர்த்தி என்பவரின் தலைமையில் இயங்கும் பிஆர்எல் என்ற விஞ்ஞானிகள் குழு, கிரகம் EPIC 211945201 என்று சூரிய குடும்பத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த கிரகத்திற்கு EPIC 211945201டி என்ற பெயரை விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.
 
 
மனதை தொட்ட பதிவு..!
 
புதுசா கல்யாணம் ஆன கணவன், மனைவிக்கு இடையே ஒரு ஒப்பந்தம்.. இன்று ஒரு நாள் மட்டும்...., யார் வந்தாலும் கதவை திறக்கக்கூடாது என்று முடிவெடுத்தனர்.
 
அன்றே.., கணவனுடைய அம்மா, அப்பா வந்தனர்... இருவரும் அவர்கள் வருவதை..., ஜன்னல் வழியாக பார்த்துவிட்டனர்.... இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்... கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை.... ஆனால், ஒப்பந்தம் போட்டு விட்டதால்...., அதை மீற மனமின்றி கதவை திறக்கவில்லை அவன்.
 
அவர்கள் வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்து....., திரும்பி போய் விட்டனர்.... கொஞ்ச நேரம் கழித்து....., மனைவியின் அம்மா, அப்பா வந்தனர்... கதவை தட்டினார்கள்....!! இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்... ஆனால், மனைவிக்கு கண்கள் கண்ணீரால் குளமானது..... என்னால் கதவை திறக்காமல் இருக்கமுடியாது....., என்று சொல்லி கதவை திறந்தாள்.
 
ஆனால், கணவன் ஒன்றும் சொல்லவில்லை.... வருஷங்கள் உருண்டோடின....! இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தது....!! மூன்றாவதாக...., பெண் குழந்தை பிறந்தது.... கணவன்..., பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில், பெரிய அளவில் செலவு செய்து....., அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து கொண்டாடினான்..... அதற்கு மனைவி, இரண்டு ஆண் குழந்தை பிறந்தபோது, இவ்வளவு பெரிய அளவில் கொண்டாடவில்லை..... பெண் குழந்தை பிறந்தவுடன்...., இவ்வளவு பெரிய பார்ட்டி கொடுக்கறீங்களே ஏன்? என்று கேட்டாள்.
 
அதற்கு கணவன்.... எதிர்காலத்தில்....., எனக்காக கதவை திறக்க ஒரு பெண் பிறந்துவிட்டாள்....!! என்று கர்வத்துடன் சொன்னான்..

  • 0

🄼🄸🄽🄴


#2 ✿TR Thamizh✿

✿TR Thamizh✿
  • Members
  • 1,501 posts

Posted 13 June 2018 - 06:47 PM

:thumbup:  :sign0173:


  • 0

#3 Sharpu

Sharpu
  • VIP
  • 1,955 posts

Posted 13 June 2018 - 08:21 PM

அருமை........
பொய்யைக் கண்டறியும் எந்திரம் - மனைவி........
தெருவில் ஒரு ஃபிகர் கூட இல்லை - ஆழ்ந்த இரங்கல்.......
பெண் பிள்ளைகள் பொன் போன்றவர்கள்...... அப்போ ஆணின் மனம் கல்லா.....!????
  • 1

#4 Bigg Boss 2

Bigg Boss 2

    Patience A Must in TR :)

  • VIP
  • 4,383 posts

Posted 13 June 2018 - 11:05 PM

Pen pillai petra anaithu aangalukku indha unarvu kandippa puriyum sharpu bro :yes:
  • 1