Jump to content


Photo

ஏழாம் அறிவு திரை விமர்சனம்


  • This topic is locked This topic is locked
No replies to this topic

#1 ♛TamilRockers King♛

♛TamilRockers King♛

    Vijay Rasigan

  • VIP
  • 772 posts

Posted 26 October 2011 - 01:22 PM

Posted Image

ஏழாம் அறிவு திரை விமர்சனம்

http://tamilrockers....tyle_emoticons/default/Happy.gif Genetics மாணவி ஸ்ருதி 1600 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து சீனா சென்று மருத்துவத்தையும் தற்காப்பு கலைகளையும் பரப்பிய போதி தர்மரைப் பற்றி DNA ஆராய்ச்சி செய்கிறார்.

போதி தருமரின் வம்சாவளியில் வந்த சூர்யாவுடன் போதி தருமரின் DNA என்பது சதவிகதத்திற்கு மேல் (83.74%) ஒத்துப்போவதால் அவருக்கு போதி தருமரின் DNAவை செலுத்தி பழைய மருத்துவ ரகசியங்களையும், தற்காப்பு கலைகளையும் மீட்டெடுக்க முனைகிறார் ஸ்ருதி.

இதற்கிடையே சீனா – இந்தியா பயோ வார், ஆப்பரேஷன் ரெட் இன்னபிற மசாலா மேட்டர்களையும் குழைத்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

கதை... ம்ம்ம் ஓகே ஆனால் திரைக்கதை. இரண்டு குறைகள் – ஒன்று மொக்கை, இன்னொன்று லாஜிக். படம் பார்ப்பவர்களுக்கு குறைந்தபட்சம் ஐந்தறிவு கூட இருக்காது என்று நினைத்துவிட்டு மொழம் மொழமா பூவை சுற்றியிருக்கிறார்கள்.

இரண்டாம் பாதி ஆரம்பமான பின்பு இப்ப லிப்ட்ல இருந்து வில்லன் வருவான் பாரேன், இப்ப திரும்பி வந்து எட்டிப்பார்ப்பானே என்று கடைக்கோடி ரசிகன் கூட யூகிக்கும் அளவிற்கு பயங்கர க்ளிஷேத்தனங்கள்.

இரண்டே முக்கால் மணிநேரம் பொறுமையை சோதிக்காமல் பல காட்சிகளை வெட்டி எறிந்திருக்கலாம்.

சூர்யா ஹீரோயிசம் காட்டாமல் ஹீரோயிசம் காட்டுகிறார். ஸ்ருதி பாடல் காட்சிகளில் மட்டும் அழகாக தெரிகிறார். மற்றபடி உவ்வே. சீன நடிகர் ஜானி பார்த்து பார்த்தே எல்லோரையும் சாகடிக்கிறார் படம் பார்ப்பவர்களையும் சேர்த்து.

ஹீரோ பின்னாடியே ஜல்லியடித்துக் கொண்டு திரியும் காமெடியன் மிஸ்ஸிங். (சில காட்சிகள் வரும் குள்ள நடிகரை தவிர்த்து) அதற்கெல்லாம் நேரமும் இல்லை. அது படத்திற்கு பலமா பலவீனமா என்று தெரியவில்லை.

ஸ்ருதியின் தோழிகளாக வருபவர்கள் சூப்பர் ஃபிகர்ஸ்.

பாடல்கள் பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கும். அவற்றை காட்சிப்படுத்திய விதத்தில் ஒளி ஓவியர் ரவி கே சந்திரன், கலை இயக்குனர் ஆகியோரது உழைப்பு தெரிகிறது. குறிப்பாக முன் அந்திச்சாரல் பாடலில் காட்டப்பட்ட லொக்கேஷன் பிரமிக்க வைத்தது.

பின்னணி இசையை பொறுத்தவரையில் சொதப்பலோ சொதப்பல். க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் எழவு மியூசிக் மாதிரி ஒன்னு போட்டிருக்கிறார், கொன்னுட்டாரு போங்க.

படம் ஆரம்பிக்கும் முன்பு செய்திப்பட பாணியில் போதி தர்மரைப் பற்றி சுமார் இருபது நிமிடக்காட்சிகள் ரசிக்க வைத்தன. தியேட்டருக்கு லேட்டாக வரும் ரசிகர்கள் பாவம்.

அதே மாதிரி க்ளைமாக்ஸ் முடிந்தபிறகு சூர்யா வேப்பிலை மருத்துவம், மஞ்சள் மகத்துவம், யாழ்ப்பாண நூலகம் எரிப்பு என்று தமிழனை குத்திக்காட்டும் வசனங்கள் நச்.

படம் முடிந்த மறுவினாடியே தெறித்து ஓடும் ரசிகர்களும் பாவம்.

சில காட்சிகளில் மட்டும் தமிழனை பெருமைப்படுத்திய இயக்குனர் பல காட்சிகளில் தமிழனை தலைசொறிய வைத்திருக்கிறார். தமிழனை ஏமாற்ற சீனாக்காரன் எல்லாம் தேவையில்லை கள்ளக்குறிச்சிக்காரனே போதும் என்று நம் தலையில் மாங்கு மாங்கென்று டன் கணக்கில் மிளகாய் அரைத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

கலைஞரின் பேரன் உதயநிதி ஸ்டாலின் எடுத்த படத்தில் இலங்கைத்தமிழனின் வீழ்ச்சியை பற்றி பேசி நம்மை புடைக்கச் செய்வார்களாம். என்னங்கடா ஒங்க நியாயம்.

சராசரி பொழுதுபோக்கு படம் என்று நினைத்தால் ரசிக்கலாம். மற்றபடி தமிழ், தமிழன், தமிழனின் பெருமை என்று படத்தில் காட்டப்படும் ஜிம்மிக்ஸ் வேலைகள் எரிச்சலூட்டுகின்றன. http://tamilrockers....tyle_emoticons/default/Happy.gif
.


Edited by Velayutham, 26 October 2011 - 01:24 PM.

  • 1